Ticker

6/recent/ticker-posts

சிலி சுற்றுலா நகரில் தீயினால் இருவர் பலி, 400 வீடுகள் தீக்கிரை; அவசரநிலை பிரகடனம்



சிலியில் சுற்றுலா நகரான வீனா டெல் மாரில் பரவிய காட்டுத் தீயினால் இருவர் உயிரிழந்ததுடன், சுமார் 400 வீடுகள் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து சிலி அரசாங்கம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியின் கடற்கரையோர சுற்றுலா நகரான, வீனா டெல் மார், தலைநகர் சான்டியாகோவிலிருந்து 120 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.


அந்நகரில் வியாழக்கிiமை (22) கடும் காற்று காரணமாக தீ வேகமாக பரவியது. தலைநகர் வீனா டெல் மார் நகரில் சன அடர்த்தி மிக்க பகுதிகளுக்கு 2 மணித்தியாலங்களுக்குள் தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இத்தீ ஏற்கெனவே 110 ஹெக்டேயர் பரப்பளவான காட்டை அழித்துள்ளது என சிலியின் தேசிய அவசரநிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இத்தீப்பரவல் காரணமாக, வீனா டெல் மார் அமைந்துள்ள வல்பராசோ பிராந்தியத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்த ஜனாதிபதி கெப்ரியல் போரக் உத்தரவிட்டார் அந்நாட்டு உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments