Ticker

6/recent/ticker-posts

2022 டிசம்பர்26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம்இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது நாளையளவில் (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதற்கிணங்க, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடுமுழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments