Ticker

6/recent/ticker-posts

20 பேருக்கு சாட்டையடி தண்டனை - பழைய தலிபான் மீண்டும் திரும்புகின்றது


ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் உள்ள ஹெல்மன்ட் நகரில் கடந்த புதன்கிழமை 20 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் சாட்டையடி தண்டனையை தலிபான் நிறைவேற்றியுள்ளது.

இதன்மூலம் தலிபான் அமைப்பு 1990களில் காணப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.

திருட்டு உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஹெல்மன்ட்டின் தலைநகரமான லக்ஸ்கர் காவில் உள்ள விளையாட்டரங்கில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆளுநரின் அலுவலக பேச்சாளர் முகமட் ரியாஸ் என்பவரை மேற்கோள்காட்டி காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் 35 முதல் 39 சவுக்கடிகள் வழங்கப்பட்டன மாகாணத்தின் மக்கள் முதியவர்கள் அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் இந்த தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என ரியாஸ் தெரிவித்துள்ளார்.

பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

2021 இல் ஆப்கானிஸ்தானின் ஆட்சி பொறுப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது முதல் தலிபான் சரியா சட்டத்தை அல்லது இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

சமீபத்தில் தலிபான்கள் கொலையொன்றை செய்த நபர் ஒருவருக்கு மரணதண்டனை விதித்தனர்,- ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலத்தில் நிறைவேற்றப்பட்ட பகிரங்க மரண தண்டனை இது.

மரண தண்டனை நிறைவேற்றம் கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டது ஐநா உட்பட சர்வதேச அமைப்புகள் இதனை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தன.

மேற்கு பாரா மாகாணத்தில் உள்ள விளையாட்டரங்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என தலிபான் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பல விசாரணைகள் மற்றும் தெய்வீக கட்டளையின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அவர்தெரிவித்தார்.

பல விசாரணைகளின் பின்னரும் ( இஸ்லாமிய சட்டங்களிற்கு ஏற்ப) இந்ததண்டனை நிறைவேற்;றப்பட்டுள்ளது எந்த தரப்பும் இது குறித்து கரிசனை கொள்ளவேண்டியதில்லை இதனை மதிக்கவேண்டும் என தலிபானின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என டொலோ நியுஸ் தெரிவித்துள்ளது.

தண்டனை நிறைவேற்றத்தை மிகவும் கவலையளிக்கும் விடயம் என வர்ணித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் உள்ளுர் மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில்தண்டனை நிறைவேற்றப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments