கத்தாரின் மனித உரிமைகள் குறித்து குறைகூறும் மேற்கத்தியர்களின் பாசாங்கு குணத்தை FIFA எனும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவும் (Gianni Infantino) சாடியுள்ளார்.
கத்தாரில் இன்று (20 நவம்பர்) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்கவுள்ள வேளையில் அங்கு வெளிநாட்டு ஊழியர்கள், பெண்கள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் ஆகியோர் நடத்தப்படும் விதம் குறித்த குறைகூறல்கள் மேலோங்கி இருக்கின்றன.
அது நியாயமற்றது என்று தலைநகர் டோஹாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தின்போது இன்ஃபான்டினோ கூறினார்.
கடந்த 3,000 ஆண்டுகளாக ஐரோப்பியர்கள் செய்தவற்றுக்கு அடுத்த 3,000 ஆண்டுகளுக்கு அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கத்தாரில் விளையாட்டு அரங்கங்களில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்தும் அவர் பேசினார்.
"3 மணிநேரத்திற்கு மது அருந்தாவிட்டாலும் உயிர் பிழைக்கலாம்" என்று இன்ஃபான்டினோ கூறினார்.
0 Comments