இரட்டை வேடக்காரன் ஜெர்மனி பற்றி தெரியுமா? கடந்த தசாப்தத்தின் சிறந்த வீரன் ஒருவனின் Career ஐ அழித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?

"நான் நன்றாக விளையாடும் போது அவர்கள் என்னை ஜெர்மனியனாக பார்க்கிறார்கள். நான் மோசமான நிலையில் இருக்கும் போது அவர்கள் என்னை இழிவு படுத்தவில்லை, மாறாக என் மதத்தையும், என் துருக்கிய வம்சாவழியையுமே இழிவு படுத்துகிறார்கள்"



இது Mesut Ozil எனும் வீரன் ஜெர்மனி அணியை விட்டு வெளியேறும் போது கூறியது. அவன் ஒன்றும் மற்ற வீரர்களை போல் தானாக விரும்பி ஓய்வு பெறவில்லை. மாறாக அணியில் இருந்து துரத்தப்பட்டான். ஜெர்மனியின் மிக கேவலமான இனவாத வெறியினால் வெளியேற்றப்பட்டான்.

Mesut Ozil 2009 ஆம் ஜெர்மன் அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் தெரிவாகிறான். அவனது அபாரமான திறமையும், விளையாட்டு நுட்பமும் பலரையும் கவர்ந்து இழுக்க, அப்போது உலகின் முன்னணி கழகமாக இருந்த Real Madrid அணி, 2010 ஆம் ஆண்டு அவனை ஒப்பந்தம் செய்து கொண்டது.



அதனை தொடர்ந்து 2013 ஆம் அண்டு, மற்றொரு சிறந்த கழகமான Arsenal அணிக்காக ஒப்பந்தம் செய்யப் படுகிறான். அதற்கு அடுத்த ஆண்டே Brzil இல் நடந்த FIFA உலக கோப்பையில் ஜெர்மன் உலக சாம்பியனாகவும் மாறியது.

அதில் Ozil இன் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்று. அந்த முழு உலக கிண்ணத்தையும் பார்த்தவர்களுக்கு அது புரிந்து இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு வீரன் பின்நாட்களில், தனது சொந்த நாட்டு ஊடகங்களாலேயே மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டான். ஆனால் அந்த விமர்சனங்கள் அவனது விளையாட்டை குறி வைத்து அல்ல, அவனது மதத்தை வைத்து, அவனது இனத்தை வைத்து.


இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத Ozil 2018 ஆம் ஆண்டு German அணியை விட்டு மொத்தமாக வெளியேறி, அவனது Arsenal கழகத்திற்காக மட்டும் ஆடி வந்தான்.

இன்று கத்தார் நாட்டு சட்டத்திட்டங்கள் மனித உரிமைக்கு எதிரானவை என்றும், LGBTQ (ஓரின சேர்க்கையாளர்கள் ) சமூகத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது போலவும், தங்களது எதிப்பை காட்டும் இந்த ஜெர்மனி, ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதற்காக தனது சொந்த வீரரையே வரம்பு மீறி விமர்சித்ததை எல்லாம் உலகம் மறந்து விடாது.

மேலும் இப்போது தங்கள் நாட்டில், ஹிஜாப் அணிவதற்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்கவும் ஆயத்தம் ஆகி வருகிறார்களாம். அவர்களை பொறுத்த வரைக்கும் மனித உரிமை என்பது ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிப்பது மட்டும் தான்.

ஹிட்லர் இப்போது இருந்தால் இந்த ஜெர்மனியை பார்த்து பெருமைப் பட்டிருப்பார் போலும்.

🖋️ Rihaam Ahamed Haneefa

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6