தனியார் மருத்துவமனையில் இடம்பெறும் சிறுநீரக கடத்தல் தொடர்பாக நேற்றைய தினம் (24) 5 பேர் பொரளை பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அவர்கள் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்கள். அவர்கள் இருபத்தி ஆறு முதல் நாற்பத்திரண்டு வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்காக இந்தக் குழுவினர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகரை விசாரணை செய்வதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.