அம்பாறை, உஹன பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழி ஒன்றில் விழுந்து ஒரு வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உஹன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மககண்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழியொன்றுக்குள் வீழ்ந்து குழந்தையொன்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு வயதும் 2 மாதங்களுமான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழியில் வீழ்ந்த குழந்தை பெற்றோரால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments