குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் இன்று (08) தாமதம் ஏற்படுமென திணைக்கள பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஆகையால், மறு அறிவித்தல் வரை கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.