கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் மொத்த பரிசு தொகையாக இந்திய மதிப்பில் ரூ.3586 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை கோடி பரிசு தொகை வழங்க பிபா அமைப்புக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது என்பதை பார்போம்.
எல்லோரும் விரும்பும் ஒரு பொருளை நீங்கள் செலவு இல்லாமல் தயாரித்தால் எவ்வளவு பணம் உங்களால் சம்பாதிக்க முடியுமோ அது போல தான் கால்பந்து நிர்வாக அமைப்பான பிபா பணம் சம்பாதித்து வருகிறது. இந்தாண்டு கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலக கோப்பை தொடரில் 440 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசு தொகையாக அறிவித்துள்ளது. உலகின் 2வது பெரிய விளையாட்டு திருவிழாவான கால்பந்து உலக கோப்பை தொடரை காண உலகம் முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
கத்தார் கால்பந்து உலக கோப்பை மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும்.பரிசு தொகையாக இவ்வளவு பணம் கொடுக்க பிபா அமைப்புக்கு எப்படி வருமானம் வருகிறது. பரிசு தொகை மட்டும் இவ்வளவு என்றால் போட்டியை நடத்துவது வீரர்கள் தங்குமிடம் என பல உள்ள நிலையில் இவற்றை அனைத்தையும் பிபா அமைப்பு எப்படி கையாள்கிறது என்பது அனைவருக்கும் எழுந்திருக்கும் கேள்வி.
பிபா (FIFA)தலைமையகம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ளது, இது நிதி விருப்பத்திற்கு பெயர் பெற்ற நாடு என்று அனைவருக்கும் தெரியும். உலகக் கோப்பை மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளுக்கான டிவி ஒளிபரப்பு உரிமைகளை விற்பதன் மூலம் பிபாவின் பெரும்பாலான வருமானம் வருகிறது. கடந்த முறை பிபாவின் வருமானம் 6.4 பில்லியன் அமெரிக்க டாலரில் தொலைக்காட்சி உரிமத்தில் இருந்து 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் பிபாவுக்கு வருமானம் கிடைத்தது.
அது மட்டும் இல்லாமல் ஒரு தொடரை பிபா அமைப்பு நடத்துகிறது என்றால் அதற்கு உலக அளவில் மதிப்புமிக்க மற்றும் முன்னனி நிறுவனங்கள் பிபாவுக்கு பணம் செலுத்தி தங்கள் நிறுவன விளம்பரங்களை விளம்பரப்படுத்துமாறு அனுகுவதில் பிபாவுக்கு பல மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக உலக கோப்பை தொடர் என்றால் உலகின் முன்னனி நிறுவனங்கள் போட்டி போட்டி கொண்டு பிபாவை அனுகும். அற்கு காரணம்.பிபா கால்பந்து உலக கோப்பை என்பது உலகில் அதிகம் பேர் பார்க்கப்படும் நிகழ்வாகும்.
பிபா நடத்தும் உலக கோப்பை தொடரை சுமார் 5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் கண்டு களிக்கின்றனர். இதனால் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் பிபாவை நாடி வருகின்றனர்.மேலும் கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் உரிமையிலிருந்து கிடைக்கும் வருமானம் முழுவதுமாக FIFA க்கு சொந்தமான துணை நிறுவனத்திற்கு செல்கிறது. 2015-18 மட்டும் பிபா சுமார் 712 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
கத்தாரில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் சுமார் மூன்று மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட்டின் ஆரம்ப விலை 100 டாலரில் இருந்து 1,100 டாலர்கள் வரை கட்டணமாக பிபா விற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் விளையாட்டு பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பிபாவின் பெயரை பயன்படுத்துவதற்கு ஆண்டுதோறும் 150 மில்லியன் டாலர்களை பிபாவுக்கு விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டில், பிபா தனது பிராண்டிற்கு வணிகப் பொருட்கள், சில்லறை விற்பனை மற்றும் கேமிங்கிற்கு உரிமம் வழங்கியதன் மூலம் 180 மில்லியன் சம்பாதித்தது. பிபா அதன் பிராண்டின் உரிமம் மூலமாகவும் வருவாய் ஈட்டுகிறது.
அது மட்டும் இல்லாமல் உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளின் ஏற்பாட்டுக் குழுக்கள், அணிகள் மற்றும் துணை ஊழியர்களுக்கான பயணம் மற்றும் தங்குமிடம், உலகக் கோப்பை சர்க்கஸ் நகரத்தை விட்டு வெளியேறிய பிறகு நடத்தும் நாட்டில் விளையாட்டை மேம்படுத்த உதவும் மரபு நிதி உள்ளிட்டவை பிபா செலுத்துகிறது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments