Ticker

6/recent/ticker-posts

இம்ரான்கான் பாக்கிஸ்தானின் புதிய பெனாசீர் பூட்டோ

இம்ரானை கொலை செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதை தொடர்ந்து ராவல்பிண்டியில் உள்ள பாக்கிஸ்தான் இராணுவத்தின் தலைமையகத்தில் பல மாற்றங்கள் நிகழக்கூடும்.

இம்ரான்கானை கொலை செய்வதற்கான முயற்சி குறித்து தங்களிற்கு எதிராக முன்வைக்கப்படும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் விமர்சனங்களை எதிர்கொள்வது எவ்வாறு என பாக்கிஸ்தான் இராணுவத்தின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவான ஐஎஸ் ஐயின் மேஜர் ஜெனரல் பைசல் நசீம் மீது இம்ரான்கான் முதலாவது தாக்குதலை மேற்கொண்டுள்ளார் அவரே தன்மீதான கொலை முயற்சிக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் சிரேஸ்ட தலைவர் அஜாம் ஸ்வாதியை சித்திரவதை செய்ததாக மேஜர் ஜெனரல் பைசல் நசீம் மீதும் அவரது அதிகாரியொருவர் மீதும் சமீபத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தை அவமதிக்கும் டுவிட்டர் பதிவொன்றிற்காக அஜாம் ஸ்வாதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நசீமும் இன்னுமொரு அதிகாரியும் தன்னை நிர்வாணமாக்கி மோசமாக தாக்கியதாக தெரிவித்தார்.

அவர்களை டேட்டி ஹரி என அழைத்த இம்ரான்கான் இருவரையும் உடனடியாக பதவி நீக்கவேண்டும் என கோரியிருந்தார்.

பிரதமர் பதவியிலிருந்து பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்ட நாளில் இருந்து இம்ரான்கான் இராணுவதளபதி பஜ்வாவையும் ஏனைய அதிகாரிகளையும் இலக்கு வைத்து வருகின்றார்இதன்னுடன் மோசமான விளையாட்டில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்து வருகின்றார்.

ஆனால் சில காலத்திற்கு முன்னர்தான் இம்ரான்கான் பாக்கிஸ்தான் இராணுவதளபதியின் கைம்பொம்மையாக காணப்பட்டார்.

பாக்கிஸ்தான் இராணுவதளபதி அவரது தனது முன்னாள் தலைவர் ராகீல் ஷெரீப் உடன் இணைந்து பாக்கிஸ்தானின் உயர் பதவியில் இம்ரான்கானை அமர்த்தியிருக்கவேண்டும்.

எனினும் இருவருக்கும் இடையில் அதிகாரப்போட்டி ஏற்பட்டது.

பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இம்ரான் கானிற்கான பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

இராணுவத்திற்கு எதிரான இம்ரான்கானின் திடீர் நிலைப்பாட்டிற்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு காணப்படுகின்றது.பெனாசிர் பூட்டோ பாக்கிஸ்தானிற்கு மீண்டும் திரும்பியவேளை காணப்பட்டதை போல.

இம்ரான்கானின் கதை அல்லது வரலாறு பெனாசிர்பூட்டோவின் வரலாற்றுடன் சமாந்திரத்தை கொண்டுள்ளது. பெனாசிர் பூட்டோ 2007 இல் கொலைகாரர்களிற்கு பலியானார்.

அவர் இம்ரான்கானை போல அதிஸ்டசாலி இல்லை.இராணுவத்திற்கு சவால் விடுத்து அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவர் கொல்லப்பட்டார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அவர் பல ஐஎஸ்ஐ உறுப்பினர்களும் ஜனாதிபதி பர்வேஸ் முஸாராவும் தன்னை கொலை செய்ய முயல்கின்றனர் என பெனாசிர் குற்றம்சாட்டியிருந்தார்.

இம்ரான்கானை போல அவர் சில ஐஎஸ்ஐ உறுப்பினர்களின் பெயர்களை தெரிவித்திருந்தார்.அவர்களில் முஷாராவின் நெருங்கிய சகா பிரிகேடியர் இஜாஸ் ஷாவும் ஒருவர் அவருக்கு பல தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகாணப்பட்டமை வெளிப்படையான விடயம்.

பெனாசிரை குறிப்பிட்ட பேரணியில் கலந்துகொள்ளவேண்டாம் உயிர் ஆபத்துள்ளது என அப்போதைய ஐஎஸ்ஐ தலைவர் நதீம் தாஜ் எச்சரித்திருந்தார் என பின்னர் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமீபத்தில் செய்தியாளர் மாநாட்டில் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் நதீம் அன்ஜூம் இம்ரான்கான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

ஜெனரல் பஜ்வாவிற்கு வாழ்நாள் பதவி வழங்க தயார் என ஆசை காட்டினார் என தெரிவித்தார்.

ஐஎஸ்ஐ தலைவரின் தகவல் குறித்து பரவலான குழப்பம் காணப்பட்டதுஇஇம்ரான்கான் அதனை பொய் என நிராகரித்து விட்டு இஸ்லாமபாத்நோக்கிய தனதுநீண்ட பயணத்தை முன்னெடுத்தார்.

சம்பிரதாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட பின்னர் இம்ரான்கான் இராணுவத்திற்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை அவர்களை விலங்குகள் நடுநிலையாளர்கள் துரோகிகள் என அழைத்துள்ளார்.

ஐஎஸ்ஐ தலைவரின் செய்தியாளர் மாநாட்டின் பின்னர் அவர்களுடன் நேரடியாக மோத தீர்மானித்த இம்ரான்கான் தனது கட்சி உறுப்பினரை சித்திரவதை செய்த ஐஎஸ்ஐ உறுப்பினரை டேர்ட்டி ஹரி என அழைத்த அவர் அவரை பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இராணுவதளபதி பஜ்வா பதவி விலகவுள்ள நிலையில் இராணுவத்திற்குள் பதட்டம் காணப்படுகின்றதுஇசில காலமாக இராணுவத்திற்குள் பிளவை ஏற்படுத்துபவராக இம்ரான்கான் காணப்பட்டார்.

இராணுவத்தின் பாதுகாவலரை பஜ்வா கைவிட்டது குறித்து இராணுவத்தின் சிலர் திருப்தியடையவில்லை- இராணுவத்தின் ஏனைய தரப்பினர் மத்தியிலும் இதேபோன்ற கருத்துவேறுபாடுகள் காணப்பட்டன

Post a Comment

0 Comments