Ticker

6/recent/ticker-posts

ஈரானின் பிரபல கால்பந்தாட்ட வீரர் கைதானார்

ஈரானின் பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒருவர் அந்நாட்டுப் பொலிஸாரால கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஈரானின் ஃபார்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

ஈரானிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான வோரியா கஃபோரி எனும் வீரரே இவ்வாறு கைதாகியுள்ளார். 

2019 ஆம் ஆண்டு வரை ஈரானுக்காக 28 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் வோரியா கபோரி (Voria Ghafouri). 35 வயதான இவர் குர்திஷ் இனத்தவர் ஆவார்.

ஈரானிய இஸ்லாமிய குடியரசுககு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில், கழகமொன்றின் பயிற்சி நிகழ்வின் பின்னர் வோரியா கபோரியா கைது செய்யப்பட்டார் என ஃபார்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டியொன்றில் வோரியா கஃபோரி (இடது) AFP Photo

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் ஈரானிய வீரர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் வீரர் வோரியா கஃபோரி கைதாகியுள்ளார். 

உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துடனான தமது முதல் போட்டிக்கு முன்னர், ஈரானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஈரானிய வீரர்கள் தேசிய கீதம் பாடாமல் இருந்தமை குறிப்பிடத்கத்கது.

வோரியா கஃபோரி. தனது ஃபுலாத் குஸேஸ்தான் (Foolad Khuzestan) கழக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் கைதாகியுள்ளார்.

Post a Comment

0 Comments