மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மருதானையில் ஆரம்பித்து டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போராட்டத்தில், புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்திருந்தர்.


இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் கலைந்து சென்றுள்ளனர்.

ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த கூட்டம் இடைநடுவில் பாதியாக குறைந்துள்ளது.

புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்த போது, பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும், ஆயுதமேந்திய ​இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6