இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இன்று ஒரு சூதாட்டக் களமாகியுள்ளதாகவும், அது கிரிக்கெட்டை தொடர்பில் அல்லாது வேறு சில நபர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயற்பட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த ஆசிய கிண்ணத்தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடமிருந்து கைநழுவியமை தொடர்பில் தான் வெளியிட்ட கருத்தை இலங்கை கிரிக்கெட் தலைவர் ஊடகசந்திப்பொன்றில் விமர்சித்திருந்தார்.

அதற்கு தான் அளித்த பதில் கருத்துக்கு 2பில்லியன் ரூபாவை அவமதிப்பு நட்டஈடு கோரி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினால் சட்டக்கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட, விவாதிக்க உரிமையுள்ளது. அது தொடர்பில் நாடாளுமன்றுக்கு வெளியில் வழக்கு தொடரவோ, கேள்வி எழுப்பவோ முடியாது.

எனவே எனது நியாயமான கருத்துக்காக சட்டக்கடிதம் அனுப்பியமை, சிறப்புரிமையை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.