Zahirian Friends' Circle get-together.
இது றியாஸ் வழங்கும் Honest review.
1999 ஆம் க.பொ.த (சா/த) மற்றும் 2002 (உ/த) மாணவர்களின் ஒன்று கூடல்26.11. 2022 ல் ஒலுவில் பரன் தோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்வில் நூறிற்க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டமை சிறப்பு.
கிராத்துடன் ஆரம்பமான நிகழ்வு மரனித்தவர்களுக்கான துஆ பிரார்த்தனை, பாடசாலையில் ஏற்பட்ட நகைச்சுவை அனுபவங்கள் ரஸீனின் ஆன்மிக பயான் எனசுவாரசியமாக பயனிக்கின்றது.
பகல் உணவு சமைக்கப்பட்ட விதமும் பரிமாறப்பட்ட விதவும் அருமை. சாப்பிட்டுமுடிந்தவுடன் கை துடைக்க "டிஸு" இல்லாமல் பரிதவித்த காட்சி கண்களில்கண்னிரை வரவைத்தாலும் நண்பர் ஒருவரின் உதவியுடன் அந்த பிரச்சினைதீர்க்கப்பட வட்டிலப்பம் கேட்டு நெருப்பெடுக்கின்றனர் ஒரு சாரார்.
தேனீர் இடைவேளையின் பின்னர் சிறு நீர் கழிப்பதறக்காக ஒரு கூட்டம்வரிசையில் நின்றது பரன் தோட்டத்தில் உள்ள அடிப்படை வசதி குறித்து சிந்திக்கவைக்கின்றது.
மறுபுறம் ஆரம்பமான அறிமுக நிகழ்வு ஒழுக்கமைக்கப்பட்ட விதமும்சொல்லப்பட்ட விடயங்களும் நகைச்சுவை. வெளி நாட்டு நண்பர்களை Zoom ஊடாக வெள்ளித்திரையில் இனைத்து அவர்களில் குரலை ஒலிபெருக்கியுடாகவும்கொண்டு வந்த றியாஸின் தொழிநுட்ப திறன் பார்பவர்களை வியக்க வைக்கின்றது.
இது ஒரு புறமிருக்க போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது எதிர் பாராத ஒருதிருப்பம். "காதல் மன்னன்" விருதுக்கு பலத்த போட்டி நிலவிய போதும் மெளசூம்பரிசிலை தட்டிச் செல்ல அதிக குழந்தைகள் பெற்ற அப்பனுக்குரிய பரிசுகியாஸுக்கு கிடைக்கின்றது. குண்டர்களுக்கான போட்டி நெட்டயர்களுக்கானபோட்டி தாடி வைத்தவர்களுக்கான போட்டி என பல இருந்தும்மொட்டையர்களுக்கான போட்டி இல்லாமல் போனது ஏமாற்றமாக இருந்த போதும்சுஹைப்பின் ஆங்கில வர்ணனை அனைவராலும் ரசிக்கும் படி இருந்தது.
ஜனுஸ், ரின்சான் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கணடா சிராஜின்பாடலுடன் ஆரம்பமான இசை நிகழ்ச்சி ஜனுஸின் கவிதை, மெளசூமின் கவிதை, ரொஸனின் பாடல், சுகைப் ரம்ஸான் குழுவின் பாடல் என களைகட்டுகின்றது.
Working Committee தெரிவை பிர்னாஸ் ஒருங்கினைக்க ஹப்ராத், ரஜாய், இயாஸ்போன்றவர்கள் சுமுகமாக தெரிவு செய்த விதம் அருமை.
தொழுகையை உரிய நேரத்திற்க்கு நிறைவேற்றுவதில் காட்டிய அக்கரைபாராட்டுக்குரியது.
இறுதியாக மெளசூம் நன்றியுரை வழங்க இமையோரம் ஈரம் கசிய கைகுழுக்கிமுசாபா செய்து சலாவாத்துடன் நிறைவடைகின்றது ஒன்று கூடல்.
மொத்தத்தில் ஒன்று கூடல் இன்னும் பல வேண்டும்.
படங்கள் உதவி - அ.ம. அதாவுல்லா
0 Comments