Ticker

6/recent/ticker-posts

ஸ்டீவ் ஜொப்ஸின் பழைய பாதணி 8 கோடி ரூபாவுக்கு விற்பனை




அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் பயன்படுத்திய பாதணி ஜோடியொன்று 218,750 அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 8 கோடி இலங்கை ரூபா, 1.77 கோடி இந்திய ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஜுலியன்ஸ் ஒக்சன்ஸ் எனும் ஏல விற்பனை நிறுவனத்தினால் கடந்த 11 முதல் 13 ஆம் திகதிவரை இப்பாதணிகள் ஜோடி ஏல விற்பனைக்கு விடப்பட்டன.

இப்பாதணிகளை 218,750 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இப்பாதணிகளை 1970களிலும் 1980களிலும் ஸ்டீவ் ஜொப்ஸ் அணிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதணிகள் ஸ்டீவ் ஜொப்ஸின் முன்னாள் வீட்டு முகாமையாளர் மார்க் ஸெப் என்பவருக்கு பின்னர் சொந்தமாக இருந்தன.

அப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் பல முக்கிய தருணங்களில் இப்பாதணிகளை ஸ்டீவ் ஜொப்ஸ் அணிந்திருந்தார் என மேற்படி ஏல விற்பனை நிலையம் தெரிவித்துள்ளது.

இப்பாதணிகள் உலகின் பல நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அண்மைக்காலத்தில் இத்தாலியின் மிலானோ, அமெரிக்காவின் நியூ யோர்க், ஜேர்மனியின் ரஹ்ம்ஸ், கொலோன், ஸ்டட்கார்ட் முதலான இடங்களிலும் இப்பாதணிகள் கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments