சிட்னியில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், குணதிலக, நாளை
(7 நவம்பர் 2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஐ.சி.சியால் அறிவிக்கப்பட்டதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தி உள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் நடைபெறும் விடயங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உன்னிப்பாகக் கண்காணிக்கும்,
மேலும், ICC உடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும் மற்றும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கிரிக்கட் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க, சிட்னி சிட்டி பொலிஸாரினால் பெரமேட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த நீதவான், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments