மாத்தளை உக்குவெலவில் உள்ள வீட்டில் தாய் மற்றும் மூன்றரை வயதான பிள்ளை ஆகியோரை வெட்டிய சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் வீடு, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீயினால் சந்தேக நபரின் வீட்டின் சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் மூன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.