தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் நாளை மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பிறகு நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது .
0 Comments