அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சாகச நிகழ்ச்சியில் போது இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களில் ஆறு பேர் இருந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
போயிங் பி-17 மற்றும் பெல் பி-63 கிங்கோப்ரா விமானங்கள், விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் தரையில் விழுந்து நொறுங்கியது. பின்னர் தீப்பிடித்து, வானில் கரும்புகை தோன்றியது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
0 Comments