பிரிட்டனைச் சேர்ந்த கொலையாளி ஒருவர், 101 பெண்களின் சடலங்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
68 வயதான டேவிட் ஃபுல்லர் எனும் இந்நபர் ஏற்கெனவே ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இவர் 25 வென்டி நெல் மற்றும் 20 வயதான கரோலின் பியர்ஸ் ஆகிய இரு யுவதிகளை 1987 ஆம் ஆண்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருந்தார். கொல்லப்பட்ட வென்டி நெல், கரோலின் பியர்ஸ்அ
அத்துடன் 2008 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பிணவறைகளில் வைக்கப்பட்டிருந்த 78 பெண்களை துஷ்பிரயோகப்படுத்தியமை தொடர்பான 51 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், வைத்தியசாலை பிணவறைகளில் வைக்கப்பட்டிருந்த மேலும் 23 பெண்களின் சடலங்களை தான் பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக இங்கிலாந்தின் க்ரோய்டன் கிறவுண் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது டேவிட் ஃபுல்லர் ஒப்புக்கொண்டார். இதனால் அவர் பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக ஒப்புக்கொள்ளப்பட்ட, பெண் சடலங்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. டேவிட் புல்லருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
0 Comments