மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோஹித் சர்மாவின் ரசிகரை, விராத் கோலி ரசிகர் அடித்தே கொன்ற சம்பவம் தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RCB எல்லாம் ஒரு அணியா எனப் பேசிய ரோகித் சர்மா ரசிகரை விராத் கோலி ரசிகர் அடித்தே கொன்றுள்ள நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் சிட்கோ தொழிற்சாலை அருகே இளைஞர் ஒருவர் புதன்கிழமை காலை சடலமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.

இதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற சிட்கோ தொழிலாளர்கள் இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

சடலமாக கிடந்த இளைஞரின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

சடலமாக கிடந்த இளைஞர் யார் , அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டதில்,

அவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான விக்னேஷ் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், கொலைக்கு காரணமான தர்மராஜை கைது செய்தனர்

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

“தர்மராஜூவும், விக்னேஷும் நண்பர்கள், இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி விட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

பேச்சு ஐ.பி.எல்., தொடர்பாக செல்லும்போது யார் சிறந்த வீரர்? விராத் கோலியா, ரோகித் சர்மாவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்போது விராத் கோலிக்கு ஆதரவாக தர்மராஜூம், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக விக்னேஷும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில், ஆத்திரமடைந்த விராத் கோலி ரசிகர் தர்மராஜ், ரோகித் சர்மா ஆதரவாளர் விக்னேஷை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்.

இதில் பலத்த காயமுற்ற விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அங்கிருந்து தர்மராஜ் தப்பித்து ஓடிவிட்டார்” என்றனர்.

ரோகித் சர்மா ஆதரவாளரான விக்னேஷ், தர்மராஜை பாடி ஷேமிங் செய்து வெறுப்பேற்றினார் என்றும் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சண்டை முற்றியுள்ளது எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் மோகத்தில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6