கனகராசா சரவணன்)
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்கள் மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்ததுடன் அவரை புதன்கிழமை (25) கடமையிலிருந்து இடைநிறுத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் கடமையாற்றிய அம்பாறை மாவட்டத்தைச் சோந்த பொலிஸ் சாஜன்ட் அங்கு கடமையாறிறிவந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்கள் மீது பாலியல் சேட்டையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளதார் எனக் கூறப்படுகிறது.
வைப்பகப் படம்
இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் முறைப்பாடு செய்தததையடுத்து பொலிஸ் சார்ஜனிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரை புதன்கிழமை கைது செய்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டட நிலையில் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரை கடமையிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
0 Comments