பிரபல சமூக செயற்பாட்டாளரும், காலி முகத்திடல்
போராட்டத்தில் ஈடுபட்டவருமான இஸ்மத் மௌலவிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இஸ்மத் மௌலவி இன்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்மத் மௌலவி உள்ளிட்;ட 8 பேர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால், இதை தான் செய்வோம் என்பதனை முஸ்லிம் மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே, மௌலவி கைது செய்யப்பட்டதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வட்டகல தெரிவித்துள்ளார்.
0 Comments