Ticker

6/recent/ticker-posts

கல்முனை அல் பஹ்றியா மாணவர்கள் வரலாற்று சாதனை ..


யு.எல்.அலி. ஜமாயில்

அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வன். MM றிஹான் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கதையும், பெண்களுக்கான 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வி MNF ஸஜா முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கதையும் சுவீகரித்துக்கொண்டனர். 



மேலும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான அஞ்சலோட்டப்போட்டியில் செல்வி. MSF. ஸும்றா, MNF. ஸஜா, JF. லுபாப், NF. மின்ஹா உள்ளிட்ட குழுவினர் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய மட்ட போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பாடசாலை வரலாற்றில் சாதனைக்குரிய மைல்கல்லாகும். இந்த வெற்றியாளர்களுக்கு உறுதுணையாக பயிற்சிகளை வழங்கிய, உடற்கல்வி ஆசிரியர்களான MH. பழீல், UL ஸிபான் ஆகியோரும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான, MAM. றியால், AWM. அஸாட்கான், JA. அல் அஸ்ரார் ஆகியோருக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கின்றனர். 


மேலும், இவர்களுக்கு பல வழிகளிலும் வழிகாட்டல்களையும் உதவிகளையும் பாடசாலையின் அதிபர் MSM. பைஷால் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியாளர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பக்க பலமாயிருந்த அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதன் போது, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள், பள்ளிவாயல் நிர்வாகங்கள், விளையாட்டு கழகங்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனவந்தர்கள், பெற்றோர், பிரதேசத்தின் ஏனைய பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் வலயக் கல்விப்பணிமனை அதிகாரிகள் , சாதனையாளர்களை  கெளரவித்து பரிசில்கள் வழங்கி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments