இரண்டு வருடங்களுக்குள் இலங்கையை உலகின் மிகவும் முன்னேறிய நாடாக மாற்றும் வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வளங்களும் உள்ள இலங்கை, சரியான ஆட்சியாளரின் கீழ் வரவில்லை, இதனாலேயே தற்போதைய நிலையை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ''உத்தர லங்கா '' சபை கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

உத்தர லங்கா சபையின் இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்