Ticker

6/recent/ticker-posts

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வியை கற்க அனுமதி வழங்கிய தலிபான் அரசாங்கம்... ஏராளமான பெண்கள் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்பு.


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக, பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க, பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கு, தாலிபன்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று (14) முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர்.

தலைநகர் காபூலில் கடந்த மாதம் பயிற்சி மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தமை நினைவுகூரத்தக்கது.

Post a Comment

0 Comments