எம். றொசாந்த் 


தாய் இறந்த சோகத்தில் மகனும் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பதிவாகி உள்ளது.
யாழ்ப்பாணம் - நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது - 32) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்


இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார்.

இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துள்ளார்.