பிரதமர் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்தையடுத்து, தனது புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிசி சுனாக்கும் பெனி மோர்டோன்ட்டும் இப்பதவிக்குப் போட்டியில் முன்னிலையில் இருந்தனர்.
எனினும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் பெனி மோர்டோன்ட் போட்டியிலிருந்து விலகினார். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ரிசி சுனாக் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
பிரிட்டனில் ஆளும் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவரே பிரதமராக தெரிவு செய்யப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments