Ticker

6/recent/ticker-posts

தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு, புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருமானம் தொடர்பில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, மொத்த மாத வருமானம் 100,000 ரூபா அல்லது அதற்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அந்த வகையில் ஆகக் கூடிய தனிநபர் வருமான வரி விகிதம் 36 வீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments