Ticker

6/recent/ticker-posts

நான் நினைக்கின்றேன், மரிக்கார் எம்.பி, ஹிருணிக்காவின் பின்னால் போகிறார் என்று..... என் பின்னால் வாருங்கள் ; ஜனாதிபதி ரணில்


ஜப்பானுக்கு பயணிக்கும் வழியில் சிங்கப்பூருக்குச் சென்று, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் மதிய உணவை உட்கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் மறுத்தார்.


பாராளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றிக்கொண்டிருந்த மரிக்கார் எம்.பி, தற்போதைய ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மத்திய வங்கியின் கொள்ளையன் என தற்போதைய ஜனாதிபதி ரணிலை விக்கிரமசிங்கவை விமர்சித்தனர்.


சிங்கப்பூரிலிருந்து அர்ஜுன மகேந்திரனை அவரே வரவழைத்ததாகவும் தெரிவித்தார்கள். எனினும், ஜப்பானுக்கு செல்லும் வழியில், 6 மணிநேரம் சிங்கப்பூரில் ஜனாதிபதி ரணில் இருந்திருக்கிறார். அப்போது, சிங்கப்பூரின் அமைச்சர் ஒருவரை சந்தித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், எமக்குக் கிடைத்தத் தகவல்களின் பிரகாரம், அர்ஜுன மகேந்திரனுடனேயே ரணில் விக்கிரமசிங்க மதிய உணவை சிங்கபூரில் உட்கொண்டிருக்கின்றார் என்றார்.


சபையிலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மரிக்காரின் உரைக்குப் பதிலளித்து உரையாற்றுகையில், சிங்கப்பூரில் அர்ஜுன மகேந்திரன் உடன் மதிய உணவை உட்கொண்டதாக மரிக்கார் கூறுகிறார். சிங்கப்பூரின் அமைச்சருடனேயே காலை உணவை உட்கொண்டேன். மதிய உணவை விமானத்திலே உட்கொண்டிருந்தேன். வேண்டும் என்றால் என்ன உணவை சாப்பிட்டேன் என்பதையும் காண்பிக்கிறேன் என்றார்.

தொடர்ந்து கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுபோன்ற குற்றச்சாட்டை ஹிருணிகாவும் முன்வைத்திருந்தார். அதேபோல, மரிக்காரும் முன்வைத்துள்ளார். நான் நினைக்கின்றேன், மரிக்கார் எம்.பி, ஹிருணிக்காவின் அடியொட்டி பயணிக்கின்றார் என்றார்.

அதனை மறுத்து கருத்துரைத்த மரிக்கார் எம்.பி, நான் ஹிருணிக்காவின் பின்னால் போகவும் இல்லை, போகவும் மாட்டேன் என்றார்.

அதன்பின்னர் எழும்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “அப்படியானால் என் பின்னால் வாருங்கள் பயணிப்போம்” என மரிக்காருக்கு அழைப்பு விடுத்தார்.

Post a Comment

0 Comments