பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் Pti கட்சியின் தலைவருமான இம்ரான் கான், 5 வருட காலம் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் குறத்து முறையாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றசாட்டு தொடர்பான விசாரணையின் பின்னர் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிங்கந்தர் சுல்தான் ராஜா தலைமையிலான 4 பேர் கொண்ட விசாரணைக் குழு இன்று வெள்ளிக்கிழமை இத்தீர்மானத்தை அறிவித்தது.

இந்த குழுவில் 5 பேர் இடம்பெற்றிருந்தனர். எனினும் அவர்களில் ஒருவர், இன்றைய அறிவிப்பின் போது சமுகமளிக்கவில்லை