எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாய் ஒருவர் கடிதம் எழுதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன், நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
அதனைடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments