இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்குபாலம் ஒன்று அறுந்து வீழ்ந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
குஜராத்தின் மோர்பி நகரில், மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த சுமார் 150 வருடங்கள் பழமையான தொங்கு பாலம் நேற்று இரவு 6.40 மணியளவில் அறுந்து வீழ்ந்தது.
230 மீற்றர் (754 அடி) நீளமான இப்பாலம் 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும். புணரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் 5 நாட்களுக்கு முன்னர் இப்பாலம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
பூஜையொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் தொங்கு பாலம் மீது நடந்து சென்றுகொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த பாலத்தின் மீது சுமார் 400 பேர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவத்தில் 141 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளன நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், சிறார்கள் மற்றும் வயோதிபர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments