உகாண்டா பார்வையற்றோர் பாடசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆபிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகில் முகோனா என்ற இடத்தில் பார்வையற்றோருக்காக சலாமா என்ற பெயரில் ஒரு பாடசாலை இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்து பாடசாலை முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அங்குள்ள ஹெரோனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தத் தீவிபத்தின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.
உகாண்டாவில் பாடசாலைகளில் தீ விபத்துகள் நேருவது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments