வெல்லம்பிட்டி - மெகொட கொலன்னாவ கடையொன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று திடீரென முன்னோக்கி சென்று சிறுவன் ஒருவர் விபத்துக்குள்ளாகிய வீடியோ இரு நாட்களாக சமூக வலைகளில் பகிரப்பட்டு வருவது அறிந்ததே.
அது தொடர்பான அப்டேட்..
வேனுக்கு 4 மீற்றர் முன்னால் குறித்த சிறுவன் காத்திருந்ததுடன், வேன் மோதியவுடன், உடனடியாக சிறுவனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விபத்தின் போது சாரதியை தவிர பெண் ஒருவரும் சிறு குழந்தையொன்றும் வேனுக்குள் இருந்ததாகவும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரேக்கை மிதிக்காமல் ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் குழந்தைக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராக்களில் பதிவான காட்சி இதோ
0 Comments