நான் சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறித்து சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் வெளியாகும் விமர்சனங்களை கருத்திலெடுக்கப்போவதில்லை என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


தன்னை பற்றி வெளியாகியுள்ள முகநூல் பதிவுகள் குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர்  எவரும் கேலிசெய்யலாம் விமர்சிக்கலாம் அவர்களை பற்றி யாருக்கு கவலை என தெரிவித்துள்ளார்.


போதியளவிற்கு விமர்சித்துவிட்டோம் கேலி செய்துவிட்டோம் என அவர்கள் நினைக்கும்போது அவர்கள் அதனை நிறுத்திவிடுவார்கள் என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர் இந்த நாட்டின் மக்களிற்கு விமர்சனத்துடன் கேலி செய்ய மாத்திரம்தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.


முஸ்லீம் மக்களிற்கு எதிரான கருத்துக்;களை கொண்டுள்ள ஞானசார தேரர்கொழும்பில் வெள்ளிக்கிழமை சவுதிஅரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.


இதனை தொடர்ந்து அவர் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்டதை விமர்சித்து கேலியான பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.அவரை அழைத்தமை நாட்டின் முஸ்லீம்களை அவமரியாதை செய்தமைக்கு சமமானது என முகநூலில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6