Ticker

6/recent/ticker-posts

நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விரைவில் பொதுவான யாப்பு - முஸ்லிம் கலாசார திணைக்களம் அதிரடி!


 ஏ.ஆர்.ஏ.பரீல்)


நாட்டில் இயங்­கி­வரும் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்­த­வற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்கள் யாப்பு இன்றி இயங்­கி­வ­ரு­வதால் பல்­வேறு குழப்­பங்கள் பதி­வாகி வரு­வ­தா­கவும் திணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.


பள்­ளி­வா­சல்­களை குழப்­பங்கள் இன்றி சீராக இயங்கச் செய்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மாதி­ரி­யாப்பு ஒன்­றினை வடி­வ­மைத்­துள்­ளது. இந்த யாப்பின் வரைபு வக்பு சபையின் அனு­ம­தி­யுடன் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. எதிர்­வரும் இரண்டு மாத காலத்­துக்குள் இச்­செ­யற்­திட்டம் அமு­லுக்கு வர­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் ‘விடி­வெள்­ளிக்கு’ க்குத் தெரி­வித்தார்.


இது தொடர்பில் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பள்­ளி­வா­சல்கள் எது­வு­மின்றி தன்­னிச்­சை­யாக இயங்­கி­வ­ரு­கின்­றன. இத­னா­லேயே பள்­ளி­வா­சல்­களில் அடிக்­கடி பிரச்­சி­னைகள் தோற்றம் பெறு­கின்­றன. யாப்­பு­களைக் கொண்­டுள்ள பள்­ளி­வா­சல்கள் கூட அந்த யாப்­பு­களின் வழி­மு­றை­களைப் பின்­பற்­று­வ­தாகத் தெரி­ய­வில்லை.


திணைக்­க­ளத்­தினால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள யாப்­புடன் பள்­ளி­வா­சல்கள் தங்­க­ளது ஊர் வழ­மைகள் மற்றும் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் உள்­ள­டக்கிக் கொள்ள முடியும். பொது­வான யாப்பு முறைமை பள்­ளி­வா­சல்கள் இன்­மையால் 60 % முதல் -70% வரையி­லான பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபைத் தெரி­வுகள் தொடர்பில் முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.


பள்­ளி­வா­சல்­க­ளுக்­கு­ரிய மாதிரி யாப்பு விரைவில் நிர்­வா­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பிட்ட யாப்­புக்கு புறம்பாக தன்னிச்சையாக செயற்படும் பள்ளவாசல் நிர்வாகங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளவாசல்களை நிர்வாகங்களும், ஜமா அத்தாரும் இறையில்லங்களாக கருதி செயற்படவேண்டும் என்றார்.- Vidivelli

Post a Comment

0 Comments