ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

இரவு எட்டு மணிக்கு பின்னர் பணத்தை செலவு செய்ய கொழும்பில் ஒரு இடமும் இல்லை அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.அதற்கே நைட் லைப் என்கின்றோம். நைட் எக்கோனமி என்கின்றோம்.அதனை நாம் உருவாக்க வேண்டும்.நாட்டிற்கு டொலரை கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் நம்மால் டொலர்களை கொண்டுவர முடியாது. வீட்டில் நம்மால் எரிவாயுவை உற்பத்தி செய்யமுடியாது.எரிபொருளை உற்பத்தை செய்ய முடியாது.


மன்னார் தீவினை எமக்கு கலியாட்டங்களுக்காக தயார்படுத்த முடியும்.மெக்காவ் போன்று டொலர்களில் கொடுக்கல் வாங்கல் செய்யவதை அங்கு அறிமுகம் செய்ய முடியும்.மன்னாரை கருவாடு உலர்த்துவதற்கு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு களியாட்ட பிரதேசமாக உருவாக வேண்டும் என குறிப்பிட்டார்.