மிகவும் விறுவிறுப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் 

நேற்று இரவு இடம்பெற்ற ஆசிய கிண்ண இறுதிப்


போட்டியில் இலங்கை அணி எட்டு ஆண்டுகளின் பின்னர் அபார வெற்றி பெற்று ஆசிய கிண்ண சம்பியனானதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண  இளைஞர்கள் ஆராவரம் எழுப்பி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாதளவில் பெரும் எதிர்பார்ப்புடன் இடம்பெற்ற இப்போட்டியில் தமது நாட்டு அணி வெல்ல வேண்டுமென்ற பேராவாவில் மொத்த தேசத்தில் பார்வையும் ஐக்கிய இராச்சியத்தை நோக்கித் திரும்பி இருந்தது. சுவாரஸ்யமான நேற்றைய (11) இறுதிப்போட்டியை நேரலையாகக் கண்டுகளிக்கும் வகையில் கல்முனை, காத்தான்குடி வீதிகளில் திரை ஒழுங்கினைச் செய்திருந்தது. இப்போட்டி நேரலையை பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் ஆதரவாளர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களித்தனர்.










இறுதியில் இலங்கை அணி வெற்றி பெற்றதையடுத்து போட்டியை நேரலையாகக் கண்டு களித்த இளைஞர்கள் ஆராவாரமெழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், ஆசிய கிண்ணத்தை வென்று சாதனை படைத்த அணியினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து தமக்கிடையே மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன் வெடிகளை வெடித்தும் கொண்டாடினர்.


அத்தோடு, வீதிகளில் ஆராவாரத்தோடு பேரணியாகச் சென்ற இளைஞர்கள் தமது மோட்டார் சைக்கிள், வாகனங்களின் ஹோர்ன் ஒலியினை எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரதேசத்திலும் விளையாட்டுக்கழங்கள் குறித்த போட்டியை நேரலையாகக் கண்டுகளிக்கும் வகையில் அகன்ற திரை ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது