இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலை இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபகமறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் எனவும் அல்சைமர் சங்கம் எதிர்வு கூறியுள்ளது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6