Ticker

6/recent/ticker-posts

தம்புத்தேகம கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த பொலிஸ் சார்ஜன்டுக்கு பதவி உயர்வும் பணப் பரிசும்…!


 தம்புத்தேகம தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக வர்த்தகர் ஒருவர் கொண்டு சென்ற சுமார் 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்ட இரு கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சார்ஜன்ட் புத்திக குமாரவுக்கு 25 இலட்சம் ரூபா பணப் பரிசும் சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் அநுராதபுரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

எம்மால் செய்யப்பட்டுள்ன குறித்த பரிந்துரையை பொலிஸ் மா அதிபர் அங்கீகரித்த பின்னர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் அவர் சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு உயர்த்தப்படுவார் என்றும் அத்துடன் அவருக்குப் பணப் பரிசும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் புத்திககுமார எப்பாவல பிரதேசத்தில் வசிப்பவர்.


இதேவேளை, வடமத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், அவரது சேவையைப் பாராட்டுவதற்காக அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு தனது மகிழச்சியை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments