கோட்டாபய ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்துக்கு வர விரும்பினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு யாரோ இதுவரையில் இவ்வாறான விருப்பத்தை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்துக்கு வருவதில் நம்பிக்கை இல்லை எனவும் கட்சிக்குள் அவ்வாறான பேச்சுக்கள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments