பலப்பிட்டிய, வெல்லபாட பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 76 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக பலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை பிரேத பரிசோதனை செய்த நீதித்துறை அதிகாரி திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்
0 Comments