இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய 

ராஜபக்ஷ இலங்கையை வந்தடைந்துள்ளார்.


நேற்று நள்ளிரவு அவர் தாய்லாந்தில் இருந்து இலங்கையை வந்தடைந்தார்.


இந்தநிலையில் அவர் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு இன்று அதிகாலை 12.50 அளவில் அவர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்த அவரை வரவேற்பதற்காக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





முன்னதாக மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13ஆம் திகதியன்று இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்சென்றார்.


இதன் பின்னர் சிங்கப்பூருக்குசென்ற அவர், அங்கிருந்து இறுதியாக தாய்லாந்து சென்றார். எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6