Ticker

6/recent/ticker-posts

சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கூட கெசினோ களியாட்டாங்களை ஆரம்பிக்கின்றன.


 பகல் பொருளாதாரத்தில் பணம் சம்பாதிப்பதாகவும், இரவுப் பொருளாதாரம் நாட்டில் அந்தப் பணத்தை புழக்கத்தில் விடுவதற்கான அமைப்பை உருவாக்குவதாகவும் தெரிவித்த சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பகலில் சம்பாதித்த பணத்தை இரவில் செலவழிப்பதன் மூலம் இரண்டாவது பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகவும், அதற்கு விபச்சாரம் அல்லது கெசினோ வியாபாரம் என்று கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


ஒரு நாட்டில் இரவு பொருளாதாரம் இல்லை என்றால் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இருட்டிய பின் அறையில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று கூறிய டயானா கமகே, முதலில் கொழும்பை இரவு பொருளாதாரம் கொண்ட வணிக நகரமாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.


சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கூட கெசினோ களியாட்டாங்களை ஆரம்பித்துள்ளன. கடுமையான ஷரியா சட்டங்களை அமுல்படுத்திவந்த சௌதி அரேபியா கூட தற்போது தங்கள் கடும் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அந்த நாட்டை நாம் முன்னுதாரனமாக நாம் எடுக்க வேண்டும்  என குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments