வாட்ஸ்அப் பயன்படுத்தும் 90ஸ், 2கே கிட்ஸ் ஆன்லைனில் இருக்கும் போது, பிடித்தமானவர்களிடமிருந்து வரும் செய்திக்கு உடனே பதிலளிக்கவில்லை எனில், ஆன்லைனில் தானே இருக்கிறாய் ஏன் ரிப்ளை இல்லை என்ற கேள்வியை எதிர்கொண்டிருப்பீர்கள். இனி அந்த கேள்வி எழாது. அதற்கான ஒரு வசதியை வாட்ஸ்அப் வழங்க உள்ளது.
இலவசமாக கிடைக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் சேவையினால் உடனடியாக ஒரு செய்தியை, படத்தை, ஆவணங்களை அனுப்ப முடிகிறது, பெற முடிகிறது. தொடர்ந்து வாட்ஸ்அப் சேவையை அந்நிறுவனம் மெருகேற்றி வருகிறது. ஏற்கனவே அதன் பிரைவசி அமைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் அனுப்பிய செய்தி சென்று சேர்ந்ததா என்று அறிய இரண்டு டிக்குகள், படித்திருந்தால் நீல டிக். அதனை காட்டிக்கொள்ள விரும்பவில்லை எனில் அதனை மறைக்க ஆப்ஷன் என வசதிகள் உள்ளன. தொந்தரவு அளிக்கும் நபர்களை முடக்கவும் முடியும்.
அந்த வகையில் நாம் ஆன்லைனில் இருக்கிறோமா என்பதை தெரியப்படுத்தவும், அதனை தெரியப்படுத்த விரும்பவில்லை எனில் மறைக்கவும் ஆப்ஷன்கள் உண்டு. இதனை ஆக்டிவேட் செய்ய செயலியின் வலது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். அதில் கடைசியாக காட்டும் செட்டிங்கினுள் சென்றால் அக்கவுன்ட் என காட்டும். அதனுள் பிரைவசி என்ற ஆப்ஷன் முதலிலேயே இருக்கும். அதில் நமது ஆன்லைன் நிலையை அனைவருக்கும் தெரியப்படுத்தலாம், தொடர்பு எண்களுக்கு மட்டும் காட்டலாம், யாருக்கும் காட்ட தேவையில்லை, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் காட்ட தேவையில்லை ஆகியவை இருக்கும். அதனை தேர்வு செய்து தற்போது பயன்படுத்தி வருகிறோம்.
அதில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தப் போவதாக ஆகஸ்ட் மாதமே அறிவித்தது வாட்ஸ்அப், ஆனால் அது தாமதமாகியுள்ளது. இந்த மாதத்தில் அந்த ஆப்ஷன் கிடைக்கும் என்கின்றனர். லாஸ்ட் சீன் மற்றும் ஆன்லைன் என அது இருக்கும். இதனை பயன்படுத்தி நாம் சாட்டிங்கில் இருந்தாலுமே நமது ஆன்லைன் நிலையை மறைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நாம் ஆன்லைனில் இருக்கிறோம் என்பது தெரியாது. ஆன்லைனில் இருந்துகொண்டு ஏன் பதிலளிக்கவில்லை போன்ற கேள்விகளுக்கு பொய் சொல்ல வேண்டியிருக்காது.
0 Comments