2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது.
நாளை காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை வரவேற்று உற்சாகப்படுத்துமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டிருந்தது.
இதன்மூலம் இலங்கை அணி 6 தடவைகள் ஆசியக்கிண்ணத்தினை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இலங்கை வலைப்பந்தாட்ட மகளிர் அணி 63:53 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது.
0 Comments