இலங்கையில் தற்கொலை இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பொதுவான காரணிகளில் புறக்கணிப்பும் அடங்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி அலகா சிங், மனநலம் தொடர்பில் இலங்கையில் மேலும் சிறப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

 இலங்கையில் தற்கொலை இறப்பு விகிதம் 100,000 சனத்தொகைக்கு 14 என்று சுட்டிக்காட்டிய அலகா சிங், 2019 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இதுவே மிக அதிக எண்ணிக்கையாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கை உளவியலாளர்கள் கல்லூரியின் தலைவர் கபில ரணசிங்க, இலங்கையில் மனநலத்திற்காக தனியான ஒதுக்கீடுகள், வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மனநல கல்வியறிவின் அடிப்படையில் இலங்கை மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்தநிலையில் பாடசாலைகளில் போதுமான முறையில் கலந்துரையாடுவதற்கு கல்வி முறையில் மனநல விடயங்கள் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6