வீடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் பாரிய
அரச நிறுவனங்கள் உட்பட மொத்த நுகர்வோர், இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஜூன் மாத 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் ரூபா கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர்.
இதில் 9.56 பில்லியன் ரூபா கட்டணங்கள், சாதாரண வீட்டுப் பாவனையாளர்களின் கட்டணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் இந்த நிலுவைத் தொகையை வசூலிப்பது இன்றியமையாதது.
எனவே மின்சார நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என்று மின்சாரசபை கோரியுள்ளது.
தரவுகளின்படி, ஜூன் 30 ஆம் திகதிக்குள் தொழிற்சாலைகள் செலுத்தத் தவறிய கட்டணப் பெறுமதி 2.7 பில்லியன் ரூபா எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments