ஆசிய கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 184 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இப்போட்டியின் வெற்றியின் ஊடாக இலங்கை அணி சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
0 Comments